அமெரிக்க அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அக்டோபர் 27ஆம் நாள் வெள்ளை மாளிகையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துரையாடினார்.


அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, சீன-அமெரிக்க உறவை சுமுகமான மற்றும் நிலையான வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்வதை முன்னெடுபது, இப்பயணத்தின் நோக்கமாகும் என்று வாங் யீ கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், ஒரே சீனா கொள்கை, 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகள் ஆகியவை, இரு நாட்டுறவின் மிக முக்கிய அரசியல் அடிப்படையாகும். ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, சமாதான சக வாழ்வு மற்றும் ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் 3 கோட்பாடுகளின்படி, சீன-அமெரிக்க உறவின் நிதானத்தை முன்னெடுக்க வேண்டும்.

இது, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது மட்டுமல்ல, சர்வதேசச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்றதாகும் என்று குறிப்பிட்டார்.
சீனாவுடன் தொடர்பை நிலைநிறுத்தி, உலகளாவிய சவால்களைக் கூட்டாகச் சமாளிக்க அமெரிக்கா விரும்புவதாக பைடன் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author