சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் ஏப்ரல் 23ஆம் நாள் பிற்பகல் சொங்சிங் மாநகரில் புதிய காலத்தில் சீனாவின் மேற்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், முழு நாட்டின் சீர்திருத்தம், வளர்ச்சி மற்றும் நிதானத்தில் மேற்கு பிராந்தியம் முக்கிய பங்காற்றுகின்றது. மேற்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மேற்கொண்ட கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். பெரிய பாதுகாப்பு, பெரிய திறப்பு மற்றும் உயர்தர வளர்ச்சியின் புதிய அமைப்புமுறையை மேலும் உருவாக்க வேண்டும்.
பிரதேசங்களின் ஒட்டுமொத்த திறன் மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கான திறமையை உயர்த்த வேண்டும். சீனப் பாணியுடைய நவீனமயமாக்க கட்டுமானப் பணியில், மேற்கு பிராந்தியத்தின் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுத பாடுபடும் என்றார் அவர்.
சிறப்பியல்பு மற்றும் நன்மை தரும் தொழில்களின் வளர்ச்சியை முக்கிய திசையாக கடைப்பிடிக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப வளர்ந்து வரும் தொழில்களை வளர்க்க வேண்டும். மேற்கு பிராந்தியத்தில் தொழிற்துறையின் மேம்பாட்டை விரைவுப்படுத்த வேண்டும்.
உயர் நிலையுடன் உயர்தர வளர்ச்சியைப் பாதுகாத்து கடைபிடிக்க வேண்டும். தேசிய சுற்றுச்சூழல் தடைவேலியை உருவாக்க வேண்டும்.
பெரிய திறப்புடன் பெரிய வளர்ச்சியை மேம்படுத்தி, மேற்கு பிராந்தியத்தில் உள்நாட்டிற்கும் வெளி உலகிற்கும் திறப்பு அளவை உயர்த்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.