பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து பிரபல தொகுப்பாளியான அனிதா சம்பத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் வடசென்னையை பார்த்து தனக்கு மிகவும் பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்கள் எப்படி நிம்மதியாக வாழ்வார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த கொலையை செய்த கூலிப்படையினர் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு வந்தால், தான் பணிபுரியும் மீடியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் கூறியிருக்கிறார்.