மே.வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து குறித்து அறிந்து கொள்ள உதவி எண்கள் ரயில்வே துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 033-2350-8794 , 033-238-33326 இந்த எண்களை தொடர்பு கொண்டு ரயிலில் உங்களுக்கு தெரிந்தவர்கள் பயணித்திருந்தார்களா என்பதை அறிந்து கொள்ளவும்.

You May Also Like

More From Author