வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி,குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 69 அடியை எட்டியுள்ளதால் மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல என அறிவுறுத்தப்பட்டுள்ளது.