யாஜியாங் மாவட்டம், சீனாவின் சோங்ரோங் காளான்(மாட்சுடேக் காளான்) ஊர் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிறப்பான காலநிலை மற்றும் இயற்கைக்சூழல் இந்த வகை காளான் வளர்ச்சிக்கு சாதகமான சூழலை வழங்குகின்றன.
சோங்ரோங், காளான்களில் ராஜா என்ற பெருமை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை, கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்திலுள்ள மலை காடுகளில் ஆயிரக்கணக்கான டன் அளவில் சோங்ரோங் காளான்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
தற்போது, யாஜியாங் மக்களின் மதிப்புமிகு அடையாளமாக மாறியுள்ளதுடன், உள்ளூர் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் பெரிதும் மேம்படுத்தியுள்ளது.
சீனாவில் விற்கப்படும் ஐந்து சோங்ரோங் காளான்களில் ஒன்று யாஜியாங்கைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.
மேலும், சோங்ரோங் தொழில், உள்ளூர் வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. பல சுற்றுலா பயணிகள், வெளிநாட்டவர்கள் சிலர் கூட,சோங்ரோங்களை ருசிப்பதற்காக யாஜியாங்கிற்கு பயணிக்கிறன்றனர்.
தற்போது, யாஜியாங்கில் ஆண்டுதோறும் சுமார் 1,200 டன் சோங்ரோங்கள் அறுவடை செய்யப்படுகிறது.
அதன் உற்பத்தி மதிப்பு 30 கோடி யுவானை எட்டும். ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சோங்ரோங் தொழில் மூலம் விவசாயிகளின் ஆண்டு வருவாய் அதிகபட்சமாக 4 லட்சம் யுவான் வரை கிடைக்கும்.