இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
குறிப்பாக செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டதால் செல்போன் மூலமாக அதிகளவிலான மோசடிகள் நடைபெறுகிறது. அதே சமயம் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
அப்படி செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறதா என கீழ்காணும் வழிகளில் அறியலாம்.
அதன்படி செல்போனில் பேசுகையில் பிறர் குறுக்கீடு, பின்னணி சத்தம் இருப்பது, சார்ஜ் அதிவேகமாக தீர்வது, பயன்படுத்தாமல் இருக்கையில் போன் திரையில் தாமாக மாற்றம் ஏற்படுதல், இணைப்பைத் துண்டித்தால் உடனே துண்டிக்கப்படாமல் சில வினாடிகள் நீடிப்பது, தேவையில்லாத எஸ்எம்எஸ் வருவது, கேமரா மற்றும் மைக்ரோஃபோன் தாமாக ஆன் ஆவது ஆகிய அறிகுறிகளை வைத்து உங்கள் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதை அறிந்து கொள்ளலாம்.