பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் பிரச்சனை குறித்து பேசிய அவர், எங்கள் கட்சி சாதி கட்சி என்ற திருமாவளவனின் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
“திருமாவளவன் தான் மது ஒழிப்புக்கு குரல் கொடுக்கிறார் என்கிறார். ஆனால், அவர் மது ஆலை உரிமையாளர்களுக்கு பரப்புரை செய்தது ஏன்?” என கேள்வி எழுப்பிய அன்புமணி, “எங்கள் கட்சி தொடங்கிய காலம் முதலே மது ஒழிப்புக்கு போராடி வருகிறது. திருமாவளவன் தற்போதுதான் இந்த விவகாரத்தை தொடங்கியுள்ளார்” என குறிப்பிட்டார்.
மேலும், “திருமாவளவன் தனது மது ஒழிப்பு மாநாட்டிற்கு தி.மு.க-வைச் சேர்ந்த கனிமொழியை அழைத்துள்ளார். ஆனால், பா.ம.க-வை அழைக்கவில்லை.
இது ஏன்?” என கேள்வி எழுப்பிய அவர், “தி.மு.க.வினர் தான் தமிழகத்தில் மது விற்பனையில் பெரும் பங்கு வகிக்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.