வரும் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப் புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும் பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், அடுத்தாண்டிற்கான இலவச வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக, ரூ.100கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
இத்திட்டத்தின் மூலம், ஒரு கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளும் வழங்கப்படும்.
பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
