தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இன்று மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில் இன்று பொது விடுமுறை தினமாக இருந்தது. ஆனால் பிறை தெரியாத காரணத்தினால் மிலாடி நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இதனால் தமிழக அரசு பொது விடுமுறை தினத்தை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதன் காரணமாக நாளை தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்திற்கும் பொது விடுமுறை. மேலும் தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் அலுவலகங்கள், ரேஷன் கடைகள் போன்றவைகளும் நாளை செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.