தமிழக அமைச்சரவையில் மாற்றம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் சூசகம்  

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக எப்போதும் சொன்னதைத்தான் செய்யும் என்றும், ஊடகங்கள் விரும்பும் மாற்றத்திற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என்றும் கூறினார்.
மாற்றம் ஒன்றே நிலையானது என்று அமெரிக்கா செல்வதற்கு முன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author