தங்கம் வாங்கணுமா? இன்று வாங்குங்கள்! ஆபரண தங்கத்தின் விலை 240 ரூபாய் சரிவு  

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.30 சரிந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.240 சரிந்து ரூ.54,160ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,385-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,080ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 50 காசுகள் சரிந்து, ரூ.99க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author