இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்குத் தான் பரிசீலிக்கப்படுவதாகப் பரவி வரும் வதந்திகளை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.
செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ தேர்தலுக்கு முன்னதாக, இந்த வதந்திகள் குறித்து அவரது மேலாண்மைக் குழு வியாழக்கிழமை (செப்டம்பர் 11) அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ தலைவர் பதவிக்குக் கருதப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவோ சில அறிக்கைகளும் வதந்திகளும் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
இத்தகைய எந்தவொரு முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் சச்சின் டெண்டுகள் இல்லை என நிராகரிப்பு
