சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் துணை தலைமையமைச்சருமான ஹெ லீஃபெங், 12ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் டிம் குக்வை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது ஹெ லீஃபெங் கூறுகையில், இரு நாடுகளின் அரசுத்தலைவர்களின் ஒருமித்த கருத்துக்களை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தி, மாரியதை, நியாயம் மற்றும் பரஸ்பர சமத்துவத்தின் அடிப்படையில் சீன மற்றும் அமெரிக்க ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு நிலையான உறவைக் கட்டியமைப்பது, இரு நாடுகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு துணைபுரிவதோடு, நாடு கடந்த நிறுவனங்களுக்கு நிலையான எதிர்பார்ப்பு மற்றும் சீரான நிர்வாக சூழலை வழங்கும் என்று தெரிவித்தார். மேலும், ஆப்பிள் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில் நுட்ப நிறுவனங்கள், சீனாவுடனான பரஸ்பர நலன் தரும் கூட்டு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் வளர்ச்சி வாய்ப்புகளை கூட்டாக பகிர்ந்து கொள்வதை சீனா வரவேற்கிறது என்றும் ஹெ லீஃபெங் கூறினார்.
சீனாவில் தனது நீண்டகால வளர்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், அமெரிக்க-சீனப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் நிலையான மற்றும் சீரான வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் வகையில் தொழில் மற்றும் வணிக துறைகள் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் என்றும் குக் தெரிவித்தார்.
