விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், கூட்டணி என்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை, எங்கள் கனவை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் எங்கள் கொள்கைக்கு உடன்படும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்று தெரிந்து தான் அதிமுக ஒதுங்கியது. ஆனால் நாங்கள் வளர்ந்து வரும் கட்சி அப்படி பின்வாங்க முடியாது. எங்களுடைய கருத்துக்களை வைத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சி என ஒரு கட்சி இருக்கிறது என மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருப்போம் என கூறியுள்ளார்