காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி  

ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாக, இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றின.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடந்த சட்டசபை தொகுதிகளில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டேரா மற்றும் நலகர் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

ஆனால் ஹமிர்பூரில் காங்கிரஸ் பாஜகவிடம் தோல்வியடைந்தது.
டெஹ்ராவில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர், பாஜகவின் ஹோஷியார் சிங்கை எதிர்த்து 9,399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

You May Also Like

More From Author