6வது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 10ம் நாள் நிறைவடைந்தது. இதில் கையெழுத்தான விருப்ப ஒப்பந்தத் தொகை 7841 கோடி அமெரிக்க டாலரை எட்டி, 5வது இறக்குமதி பொருட்காட்சியில் பதிவானதை விட 6.7 விழுக்காடு அதிகரித்தது.
நடப்பு பொருட்காட்சியில் 442 புதிய உற்பத்திப் பொருட்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டன. வெவ்வேறு நாடுகளின் அரங்குகள், பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் கூட்டு வெற்றி பெறுவதற்கும் மேடையை வழங்கி, பன்னாடுகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
நடப்பு இறக்குமதி பொருட்காட்சியின் பரப்பளவு, புதிய பொருட்களின் வெளியீடு, சீனாவுக்கான முதலீட்டின் மேம்பாடு முதியவை, சீனாவின் திறந்த சந்தையின் ஈர்பாற்றலைக் காட்டியுள்ளது. மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட சீனாவின் நுகர்வுச் சந்தை, புதிய தொழில் நுட்பம், புதிய உற்பத்தி பொருட்கள் மற்றும் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்குச் சோதனை மேடையாகத் திகழ்கிறது.
உலகின் மிக பெரிய வர்த்தக நாடான சீனா, மாபெரும் திறந்த சந்தையை வழங்குவதோடு, வணிகச் சூழலையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இது குறித்து அமெரிக்க ஃபைசர் தொழில் நிறுவனத்தின் சீனச் சந்தை இயக்குநர் கூறுகையில், சீனாவின் திறப்பு கொள்கை சிறப்பாக உள்ளது.
குறிப்பாக நிறுவனங்களின் பதிவுப் பணி வசதியாக இருக்கிறது என்றார். தற்போது வரை, சுமார் 200 தொழில் நிறுவனங்கள், அடுத்த சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளன.