நம்முடைய பூமியை தாண்டி விண்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இருப்பினும் இதில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய அனைத்து சூழல்களும் இருக்கிறது.
இருப்பினும் பூமியைப் போன்று வேறு ஏதேனும் கிரகங்கள் இருக்கிறதா? அதில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா போன்றவைகள் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் வைரமழை பொழிவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது புதன் கிரகத்தில் பல மில்லியன் டன் அளவுக்கு வைரம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது புதன் கிரகத்தின் அடிப்பரப்பில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் 15 கிலோமீட்டர் தடிமனில் வைர படிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை சீனாவைச் சேர்ந்த யான்ஹோவா லின் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
மேலும் அதீத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக மேல் தட்டுக்கு கீழே புதைந்திருக்கும் கார்பன் படிவங்கள் வைர கட்டிகளாக மாறி இருக்கலாம் எனவும் இதனை மனிதர்களால் பயன்படுத்த முடியாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.