பெய்ஜிங் அறிக்கை பாலஸ்தீனத்துக்கு நம்பிக்கை தரும்:சீனா

சீனாவின் அழைப்பின் பேரில், பாலஸ்தீனத்தின் 14 பிரிவுகளைச் சேர்ந்த உயர் நிலை பிரதிநிதிகள் ஜுலை 21முதல் 23ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நல்லிணக்கப் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தனர்.

தொடர்ந்து, பிரிவினையை முடித்து பாலஸ்தீன தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்ற பெய்ஜிங் அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நீங் அம்மையார் 23ஆம் நாள் கூறுகையில், நீண்டகாலமாக துன்பப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு இது நம்பிக்கையைத் தரும் என்று தெரிவித்தார்.

23ஆம் நாள் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் நிறைவு நிகழ்வில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ உரைநிகழ்த்தியபோது, சீனா முன்வைத்த ஆலோசனைகளில் குறிப்பிட்ட மூன்று கட்ட அம்சங்களுக்கிடையே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது.

அனைத்தும் இன்றியமையாதது என்று தெரிவித்தார்.மாவ்நீங் கூறுகையில், பாலஸ்தீனத்தின் பல்வேறு பிரிவுகள், உள்புறத்தில் நல்லிணக்கம் அடையும் அடிப்படையில், தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தனி நாட்டை நிறுவுதல் ஆகிய இலக்குகளை நனவாக்க சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author