செவ்வாய் மற்றும் வியாழன் இந்த தசாப்தத்தின் மிக நெருக்கமான சந்திப்பிற்காக தயாராகி வருகின்றன.
இது பூமியிலிருந்து தெரியும் ஒரு அரிய வான நிகழ்வு. புதன்கிழமையன்று, இரண்டு கிரகங்களும் நமது இரவு வானில் மிக நெருக்கமாகத் தோன்றும்.
எவ்வளவு நெருக்கம் என்றால் அவற்றுக்கிடையே ஒரு மெல்லிய பிறை நிலவு மட்டுமே நுழைய முடியும்.
பூமியிலிருந்து பார்க்கையில் இவ்வளவு அருகாமை இருந்தபோதிலும், அவை உண்மையில் அந்தந்த சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட்ட 575 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.