KGF-3 இல் நடிக்கிறாரா அஜித் குமார்?  

டிடிநெக்ஸ்டில் வெளியான செய்தியின்படி, நடிகர் அஜித்தை தனது சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம் KGF புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
இந்த செய்தியின்படி, ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பிற்கு இடையில் ‘தல’ அஜித்தை சந்தித்த பிரஷாந்த் நீல், மூன்று வருட கால்ஷீட் கேட்டுள்ளாராம்.
இந்த இடைவேளையில் அவரை வைத்து இரண்டு படங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அதில் ஒன்று அஜித்துக்காக பிரத்யேகமாக எழுதப்பட்ட கதை எனவும், அதனை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிய வந்ததுள்ளது.
அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ‘குட் பேட் அக்லீ’ படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

You May Also Like

More From Author