ஜூன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டுக்கான நினைவகம் மற்றும் நன்ஹூ புரட்சி நினைவகத்தில் வழிகாட்டிப் பணியில் சேர்ந்த இளம் சாரணர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பினார். அவர்களுக்கு அன்பான ஊக்கமளிப்பதோடு, அவர்களும் நாட்டின் அனைத்து இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சர்வதேச குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், இவ்விரு நினைவகங்களில் கட்சியின் வரலாற்றுக் கதைகள், வீரர்களின் கதைகள் முதலியவற்றை நீங்கள் விளக்கி கூறுவதை அறிந்து நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் கட்சியைப் பின்பற்றி அறிவு மற்றும் திறனை அதிகரிப்பதோடு, மனவுறுதி மற்றும் நல்ல பண்புகளை வற்புறுத்தி வரலாற்றுப் பாதையில் புதிய அதியாயத்தைப் படைக்க வேண்டுமென விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
