சீனத் தலைநகர் பெய்ஜிங்கையும், மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ நகரையும் இணைக்கும் புதிய விமான வழித்தடத்தில் சீனா ஹைனன் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் 13-ஆம் நாள் மெக்சிகோ நகரில் உள்ள பெனிட்டோ ஜுவரெஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
வணிகப் பயணிகளைப் பொருத்த வரை இந்த விமான சேவை மிகவும் வசதியாக உள்ளது. இதற்கு முன்பு ஜப்பான் அல்லது ஐரோப்பா வழியாக சீனாவுக்கு திரும்ப 30 மணிநேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டியிருந்தது.
ஆனால் புதிய வழித்திடச் சேவையின் மூலம் பயண நேரம் 20 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.