சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 24ஆம் நாள், உலகச் சீனாவியல் மாநாட்டின் ஷாங்காய் கருத்தரங்குக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், பண்டைய சீனாவையும் நவீன சீனாவையும் சீனவியல் ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நீண்டகால வரவாறுடைய சீன நாகரிகம், இதர நாகரிகங்களுடன் தொடர்பு கொண்ட போக்கில் செழுமையாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சீன பாணியுடைய நவீனமயமாக்கத்துக்கு இது வரலாற்று அடிப்படையை உருவாக்கியது என்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வாளர்கள், சீன-வெளிநாட்டு நாகரிக தொடர்பு தூதுவர்களாக சீனாவியல் ஆய்வுக்கு பங்காற்ற வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.