டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!  

பாகிஸ்தானில் புதன்கிழமை ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.

இஸ்லாமாபாத் மற்றும் லாகூரிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
பஞ்சாபின் தென்மேற்கு பகுதியில் உள்ள தேரா காசி கான் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. திடீர் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானும் நடுங்கியது.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், பைசலாபாத், மியான்வாலி, பக்கர், கமாலியா, கானேவால், பல்வால், சினியோட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் அதிகளவு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் உயிரிழப்போ, சொத்து சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

You May Also Like

More From Author