பெல்ஜியத்திலுள்ள பாரிடைய்ஸா உயிரியல் பூங்காவின் தலைவரும் நிறுவனருமான எரிக் டோம்ப்க்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பி சீன-பெல்ஜிய நட்புறவு மற்றும் சீன-ஐரோப்பிய நட்புறவின் முன்னேற்றத்துக்கு அவர் தொடர்ந்து பங்களிக்குமாறு ஊக்கமளித்தார்.
பதில் கடிதத்தில் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டுகையில், எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தை வாசித்த போது, 2014ஆம் ஆண்டு எனது மனைவியுடன் பெல்ஜியத்தில் பயணம் மேற்கொண்டு, மன்னர் பிலிப் மற்றும் அவரின் மனைவியுடன் சேர்ந்து பாரிடைய்ஸா உயிரியல் பூங்காவில் பாண்டா கரடி அரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அப்போது நடப்பட்ட மரம் மலர்ந்துள்ளதையும் சீனாவின் நட்புத் தூதரான 2 பாண்டா கரடிகளும் அங்கே நலமாக வாழ்வதையும் அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்றார்.
சீன-பெல்ஜிய உறவின் வளர்ச்சியை, இரு நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் நீண்டகால முயற்சி மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்க முடியாது.
நீங்களும் பிற பிரமுகர்களும் நட்பு விதைகளை தொடர்ந்து பரப்புவதுடன், மேலதிக மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் நட்பு லட்சியத்தை நோக்கி ஈர்த்து சீன-பெல்ஜிய மற்றும் சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சிக்குப் புதிய பங்களிப்பு வழங்குவார்கள் என்று நம்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.