அமெரிக்காவின் மீது மனநிறைவின்மை கொண்டுள்ள மேலை நாட்டவர்கள்

அமெரிக்காவின் பொலிட்டிகோ நாளேட்டின் இணையதளத்தில் மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட தகவலின்படி, அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பின் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொள்கை காரணமாக, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய கூட்டாளி நாடுகளின் பொது மக்களிடையில், அமெரிக்காவின் மீதான மனநிறைவின்மை அதிகரித்து வருகின்றது. பலர் சீனாவுடன் மேலும் நெருங்கிய உறவை உருவாக்குவதற்கு ஆதரவு அளித்துள்ளதோடு, உலக மேல்நிலை வல்லரசான அமெரிக்காவின் பங்கு குறைந்து வருகிறது என்றும் கருதுவதாக அண்மையில் நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் மின்கலம் மற்றும் இயந்திர மனிதர் தொழில் நுட்ப வளர்ச்சி, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை விட முன்னணியில் உள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவைச் சேர்ந்த பலரும் உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் போட்டியில் சீனா வெற்றி பெற்று வருவதாக ஒருமனதாகத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author