ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (ஜனவரி 19) புதுடெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இது அவரது 5 வது இந்தியப் பயணமாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
