இந்தோனேசியாவின் ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக இருப்புப் பாதையில் ஜுன் 22ஆம் நாள் ஒருங்கிணைந்த சோதனை நடைபெற்றது. அப்போது, முதல்முறையாக மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த அதிவேக இருப்புப் பாதை, வடிவமைக்கப்பட்ட வேக தர நிர்ணயத்தை எட்டியுள்ளதை இது குறிக்கிறது.
கடந்த மே 22ஆம் நாள் முதல் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளில் மணிக்கு 180 முதல் 350 கிலோமீட்டராக வேகம் படிப்படியாக உயர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது, எதிர்வரும் சோதனை ஓட்டம் மற்றும் போக்குவரத்துக்கு திறப்பு ஆகியவற்றுக்கு வலுவான ஆதாரம் அளிக்கிறது.
ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக இருப்புப் பாதையின் முழு நீளம், 142.3 கிலோமீட்டராகும். போக்குவரத்துக்கு திறந்த பிறகு, இரு நகரங்களிடையேயான பயண நேரம் 3 மணிகளுக்கும் மேலிலிருந்து 40 நிமிடங்களுக்கு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.