ஸ்பெயினின் மாட்ரிட் நகராட்சி தலைவர் சீன ஊடகக் குழும இயக்குநருடன் சந்திப்பு

ஸ்பெயினின் மாட்ரிட் நகராட்சி தலைவர் அல்மெய்டா ஜூலை 29ஆம் நாள் மாட்ரிட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறை துணை தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங்கைச் சந்தித்தார்.
ஷென் ஹாய்சியுங் கூறுகையில், சீனாவும் ஸ்பெயினும் ஆழ்ந்த பாரம்பரிய நட்புறவை நிலைநிறுத்தி வருகின்றன. சீன ஊடகக் குழுமம், ஸ்பெயினின் பல்வேறு துறையினருடன் இணைந்து, இரு நாட்டு தலைவர்கள் எட்டிய முக்கிய ஒத்த கருத்தைச் செயல்படுத்தி, சீன-ஸ்பெயின் நட்பைக் கூட்டாக பரவல் செய்து, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மாட்ரிட் நகருடன் இணைந்து, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி, கால்பந்து, சுற்றுலா முதலிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பான ஒளிபரப்பில் சீன ஊடக குழுமம் பெரும் பரவல் ஆற்றலைப் பெற்றதற்கு அல்மெய்டா வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலுடன், மாட்ரிட் நகரும், பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் பெரிய நகரங்களும் நாளுக்கு நாள் மேலும் பரந்துபட்ட ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author