ஸ்விட்சர்லாந்தின் கூட்டாட்சி தலைவராகப் புதிதாக பதவி ஏற்றுள்ள பார்மெலினுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி முதல் நாள், வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், 2017ம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் அரசு முறை பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டின் தாராள வர்த்தக உடன்படிக்கையின் மேம்பாடு குறித்து கூட்டு ஆய்வு தொடங்கியது. இதற்கான பேச்சுவார்த்தை சீரான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. தற்போது ஒருசார்புவாதம், பாதுகாப்புவாதம் முதலியவை தலை தூக்கிய நிலையில், தாராள வர்த்தகத்துக்கு இரு நாடுகளின் ஆதரவு, சீன-ஸ்விட்சர்லாந்து உறவின் வளர்ச்சியைக் குறிக்கிறது. உலகின் செழுமைக்கு மேலதிக உறுதித் தன்மையையும் நிலைத்தன்மையையும் அது ஊட்டியுள்ளது. 2026ம் ஆண்டு, சீன-ஸ்விட்சர்லாந்து புத்தாக்க நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10வது ஆண்டு நிறைவாகவும், சீனாவின் 15வது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்கமாகவும் திகழ்கிறது. இரு நாடுகளின் புத்தாக்க ஒத்துழைப்பில் பரந்த வாய்ப்புகள் உள்ளன. சீன-ஸ்விட்சர்லாந்து உறவின் வளர்ச்சியில் முக்கியத்துவம் அளித்து, தலைவர் பார்மெலினுடன் இணைந்து, நலன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டுறவை புதிய கட்டத்துக்குள் கொண்டு செல்வதை முன்னெடுத்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய விரும்புதாக தெரிவித்தார்.
