9ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் மற்றும் சீன ரென்மின் பல்கலைக்கழகம் இணைந்து உலகளவில் 44 நாடுகளின் 20100 நபர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தின. 2026 உலக திறப்பு நிலைமை என்ற இக்கருத்துக் கணிப்பில், இறக்குமதி பொருட்காட்சி தொடர்ந்து நடத்தி உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்கும் சீனாவின் செயலை அவர்கள் பாராட்டியதோடு, மாற்றங்களும் குழப்பங்களும் இணைந்து ஏற்பட்டு வரும் சர்வதேச சமூகத்துக்கு இது உறுதித்தன்மையை ஊட்டியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டான நடப்பாண்டில், உயர்தர வெளிநாட்டு திறப்பு அளவை விரிவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சீனா, சர்வதேச சமூகத்தின் ஆக்கப்பூர்வ மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. உலகப் பொருளாதாரத்துக்கு சீனாவின் பங்களிப்பு தெளிவாக உள்ளது என்று கருத்துக் கணிப்பில் 84.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், சீனாவுடன் ஒத்துழைப்பை ஆழமாக்கும் விருப்பத்தை 65.6 விழுக்காட்டினர் வெளிப்படுத்தினர்.
