சீனா தயாரித்த சி919 பயணியர் விமானம் 19ஆம் நாள் சீனாவின் தென்மேற்கிலுள்ள சிச்சுவான் மாநிலத்தின் சென்துங் நகரிலுள்ள ஷூவாங்லியூ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 2 மணிநேரம் 8 நிமிடங்களில் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரிலுள்ள குவுங்கா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தது. சி919 விமானம் லாசாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குவுங்கா சர்வதேச விமானம் கடல் மட்டத்திலிருந்து 3569மீட்டர் உயரமான யாலுட்சாங்பூ ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அதற்கு அருகில் மலைகள் அதிகம். சிக்கலான அதிக மாற்றங்களுடன் கூடிய வானிலை சூழலும் உண்டு. அதனால், விமானத்தின் பீடபூமியிலுள்ள பயணச் செயல் திறனுக்கு மிக அதிக கோரிக்கைகள் தேவை.