இலங்கை சிறையில் வாடும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து ஆறு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டு படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
மேலும் ராமேஸ்வரம் பாம்பன் தூங்கு பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.