காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது.
தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.
இந்த ஆணை இன்று தன்னுடைய 91 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இரண்டு முறை மின்னல் தாக்கப்பட்ட நிலையிலும் எவ்வித சேதமும் இன்றி கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்றியமையாததாகும்.
ரூபாய் 4 கோடியே 80 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்திற்கு ஆங்கிலேயர்கள் வழங்கிய காலத்தை வென்ற ஒரு கட்டுமான வரப்பிரசாதம்.
91 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை!
