ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது இன்று காலை மும்பை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 10 பெட்டிகள் வரை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், 6 பயணிகள் மட்டும் காயமடைந்துள்ளனர். இவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த ரயில் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.