கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு: மாபெரும் பேரணியை நடத்த ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் முடிவு 

Estimated read time 1 min read

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மார்ச் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா அணிவகுப்பை நடத்தப்போவதாக ‘இண்டியா’ கூட்டணி அறிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டார்.

மறுநாள், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை மார்ச் 28 வரை அமலாக்கத்துறையின் காவலில் வைக்க உத்தரவிட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author