அக்டோபர் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.709 பில்லியன் டாலர் குறைந்து 701.176 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) தெரிவித்துள்ளது.
முந்தைய அறிக்கை வாரத்தில், கையிருப்பு 12.588 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
அதன் மூலம், முதன் முறையாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக கையிருப்பு குறைந்துள்ளது.