இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு சீனா இரங்கல்

ஜூலை 30ஆம் நாள் தென் மேற்கு இந்தியாவின் கேரளா மாநிலத்தின் வயநாடு பிரதேசத்தில் பெருமளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியன் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிகழ்ந்த பெருமளவிலான நிலச்சரிவில் சீனா கவனம் செலுத்தியுள்ளது.

உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கு உளமார்ந்த ஆறுதலையும் சீனா தெரிவிக்கிறது. காயமுற்றோர் வெகுவிரைவில் குணமடைய சீனா வாழ்த்துகிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author