பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம்

பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா தெஹரான் நகரில் இஸ்ரேலின் வான் தாக்குதலால் உயிரிழந்தார்.


இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஜூலை 31ஆம் நாள் கூறுகையில், தொடர்புடைய விஷயத்தில் சீனா பெரும் கவனம் செலுத்தி, மறைமுகமாக கொலை செய்யும் சம்பவத்தை உறுதியுடன் எதிர்க்கிறது.

பேச்சுவார்த்தையின் மூலம் பிரதேச சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்று சீனா எப்போதுமே கருத்து தெரிவிக்கிறது.

காசா பிரதேசத்தில், போர் நிறுத்தம் வெகுவிரைவில் நனவாக்கப்பட்டு, மோதல் மேலும் மோசமாகி வருவது தடை செய்யப்பட வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author