சீனா மீது நம்பிக்கை கொண்ட வெளிநாட்டு வணிகர்கள்

 

சீனாவில் வளர்ச்சிக்கான மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று 3ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சியில் பங்கேற்ற இத்தாலியின் ஒப்பனைப் பொருள் நிறுவன அதிகாரி ஜிய்டோ ஒஜிபெனி தெரிவித்தார். அவரை போல பல வெளிநாட்டு வணிகர்கள் சீனாவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளன.
ஏப்ரல் 10முதல் 15ஆம் நாள் நடைபெற்ற இப்பொருட்காட்சியில் உலகின் 60க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4000 நுகர்வுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது, அதிகமான பார்வையாளர்கள் மற்றும் கொள்முதல் வணிகர்களைக் கவர்ந்துள்ளது.
தற்போது, உலகின் 2ஆவது பெரிய நுகர்வுப் பொருள் சந்தையாகவும் முதலாவது பெரிய இணைய சில்லறை விற்பனைச் சந்தையாகவும் சீனா விளங்குகிறது.
உள்நாட்டுத் தேவையை அதிகரித்து நுகர்வை மீட்டெடுத்து விரிவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று 2022ஆம ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சீன மத்தியப் பொருளாதாரப் பணி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீன நுகர்வுச் சந்தை படிப்படியாக மீட்சி பெற்று வருகிறது. மார்ச் மாதத்தில் சில்லறை வணிக காலநிலை குறியீடு 50.6விழுக்காட்டை எட்டியது. உலக நாடுகளின் தொழில் நிறுவனங்கள் சீனாவின் பெரிய சந்தைக்குள் நுழைவதற்கு மேலதிக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நிறுனங்களைப் பொறுத்தவரை, நடப்பு நுகர்வுப் பொருட்காட்சி பொருட்களை காட்சியளிக்கும் மேடை மட்டுமல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் வாய்ப்பாகவும் விளங்குகிறது. மேலும், இவ்வாண்டு, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பைச் சீனா தொடர்ந்து முன்னேற்றவுள்ளது. பல்வேறு நடவடிக்கைகளின் மூலம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேலும் பெரிய வளர்ச்சி வாய்ப்பைச் சீனா வழங்கவுள்ளது.
15ஆம் நாள் நடப்பு நுகர்வுப் பொருட்காட்சியின் நிறைவையடுத்து, 133ஆவது சீன இறக்குமதி ஏற்றுமதிப் பொருட்காட்சி துவங்கியது. உலகின் சந்தை, பகிர்வுச் சந்தை மற்றும் அனைவரின் சந்தையாக சீனா உருவாகுவதன் வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author