அரபு லீக்கின் 32ஆவது உச்சிமாநாடு ஜெட்டாவில் நடைபெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 19ஆம் நாள் நடப்பு உச்சிமாநாட்டின் தலைவர் நாடான சௌதி அரேபியாவின் மன்னருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
அரபு நாடுகளின் கூட்டு வலிமையையும், மத்திய கிழக்கு பகுதியின் அமைதி, நிலைப்பு மற்றும் வளர்ச்சியையும் முன்னேற்றுவதில் அரபு லீக் நீண்டகாலமாக முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது. பலதுருவ உலகத்தில் முக்கிய ஆற்றலாக திகழும் சௌதி அரேபியா, அரபு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் மத்திய கிழக்கு பகுதியின் அமைதியைப் பேணிக்காப்பதற்கும் ஆக்கப்பூர்வப் பங்காற்றியுள்ளது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரபு நாடுகளுடன் இணைந்து இருதரப்பு நட்புறவைப் பரவல் செய்து, முதலாவது சீனா-அரபு நாடுகள் உச்சிமாநாட்டின் சாதனையை நடைமுறைப்படுத்தி, மேலும் உயர் நிலை கூட்டுறவை உருவாக்க சீனா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.