சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் ஜுலை 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், அரசு சாரா பொருளாதார வளர்ச்சி பற்றி அறிமுகம் செய்துள்ளது.
நீண்டகாலமாக, வளர்ச்சியை நிலைநிறுத்துவது, புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது ஆகியவற்றில் அரசு சாரா பொருளாதாரம் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது. சீனாவின் நவீனமயமாக்கம், பெரும் மக்கள் தொகை கொண்ட நவீனமயமாக்கம் ஆகும். இந்த நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான புதிய ஆற்றலாகவும், உயர்தர வளர்ச்சிக்கு இன்றியமையாத அடித்தளமாகவும் அரசு சாரா பொருளாதாரம் மாறியுள்ளது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் அரசு சாரா பொருளாதாரத்துக்கு ஆதரவான சில முக்கிய ஆவணங்களை சீனா வெளியிட்டுள்ளது. பல்வேறு தரப்புகளும் இந்த ஆவணங்களின்படி, பல கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, நல்ல பயன்களைப் பெற்றுள்ளன. அண்மையில், அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கருத்துகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணத்தில், 31 நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், அரசு சாரா பொருளாதாரம் மேலும் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.