பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்சித் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.
42க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டில் வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
பிஷின் மாவட்டத்தில் உள்ள சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே முதல் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். கில்லா அப்துல்லா பகுதியில் உள்ள ஜமியத் உலமா இஸ்லாம் பாகிஸ்தானின் தேர்தல் அலுவலகம் முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.