மனித குலத்தின் பொதுவான விழுமியம் என்ற தலைப்பிலான 2ஆவது சர்வதேச ஜனநாயக மன்றக் கூட்டம் மார்ச் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில் சீனாவின் ஜனநாயகம், உலகிற்குப் புதிய முன்மாதிரியாகத் திகழ்கின்றது என்று சாம்பிய நாட்டுச் சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரெட் மோம்பே கருத்து தெரிவித்தார்.
சில மேற்கத்திய நாடுகள் பொதுக் கருத்துத் துறையில் தொடர்ச்சியாக நேர் எதிர் நிலையை உருவாக்கி வருகின்றன. அவை உலக செழிப்புக்குத் தீங்கு விளைவிக்கும் என்று ஜப்பானின் முன்னாள் தலைமையமைச்சர் யூக்கியோ ஹடோயாமா இக்கூட்டத்தில் தெரிவித்தார்.