இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்து குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்ட் முதல் நாள் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.
வாங் யீ கூறுகையில், தங்கள் நாட்டில் உள்ள கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கு உளமார்ந்த ஆறுதல் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்தார்.