சீன ஊடகக் குழுமத்துக்கு லாவோஸ் அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி

Estimated read time 1 min read

லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான தோங்லௌன் ஜுன் 3ஆம் நாள், சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். அப்போது, சீன-லாவோஸ் இருப்புப்பாதை, லாவோஸ் நாட்டின் வளர்ச்சிக்கான பங்குகளை அவர் பாராட்டியதோடு, இந்த இருப்புப் பாதை, லாவோஸின் நிலைமையைப் பெரிதும் மேம்படுத்தி, லாவோஸ் மக்களின் கனவுகளை நனவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

லாவோஸ்-சீன எதிர்காலம் குறித்து அவர் கூறுகையில், இவ்வாண்டு, லாவோஸ்-சீன தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 65வது ஆண்டு நிறைவாகவும் லாவோஸ்-சீன நட்பு ஆண்டாகவும் ஆகும். இரு நாடுகளின் ஒத்துழைப்பும் தூதாண்மையுறவும், மேலும் சிறப்புடனும் உறுதியுடனும் உயர் நிலையை நோக்கி முன்னேறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author