ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவும், தைவான் மீட்கப்பட்டதன் 80ஆவது ஆண்டு நிறைவும் 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. சீன ஊடகக் குழுமம் தயாரித்த “தைவானின் மீட்பு”என்னும் சிறப்பு நிகழ்ச்சி அண்மையில் ஒளிப்பரப்பப்பட்டது.
சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளர்கள் 2 மாதங்களுக்குள் தைவானின் பல்வேறு வரலாற்று நினைவு இடங்களுக்குச் சென்று, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டவர்களின் தலைமுறையினர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களை பேட்டி கண்டனர். ஜப்பானின் காலனி ஆதிக்கம், தைவானில் ஏற்பட்ட கடும் பாதிப்புகள் குறித்து இந்நிகழ்ச்சியில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. தாயகத்தைப் பேணிக்காக்க முயற்சிகளை மேற்கொண்ட தைவான் மக்களின் நாட்டுப்பற்று எழுச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், “தைவானின் நிலை நிலையற்றது”என்ற தவறான கருத்துக்கு, உறுதியான வரலாற்றுச் சான்றுகள் மூலம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
