நெல்லை தேவர் பீடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

Estimated read time 1 min read

பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி தச்சநல்லூர் ஊருடையான்புரம் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப்போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவர் பீடத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டும் தேச விரோத சக்திகளின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author