சீனாவின் ஜியூச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட மீண்டும் பயன்படுத்தக் கூடிய சோதனை விண்கலம் சுற்றுவட்டப்பாதையில் 276 நாட்களாக இயங்கிய பிறகு, மே 8ஆம் நாள் திட்டமிட்டப்பட்ட இடத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
மீண்டும் பயன்படுத்தக் கூடிய விண்கலம் பற்றிய தொழில் நுட்ப ஆய்வில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதையும், இதனையடுத்து, அமைதியான நோக்கில் விண்வெளி பயன்பாட்டுக்கு மேலும் குறைந்த செலவில் மேலும் வசதியான பயண முறையை வழங்க முடியும் என்பதையும் இந்தச் சோதனையின் வெற்றி வெளிக்காட்டியுள்ளது.